|
பின்னணி இசை1: 4 ( வயலின் )
பல்லவி:
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் - | 2 | Chords
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
பின்னணி இசை2: 4+4
சரணம்1:
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
பின்னணி இசை3: 6+2+2
சரணம்2:
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன |