விண்ணில் தோன்றும் தாரகை
திரைப்படம் புனித அந்தோனியார வெளியான தேதி 19-8-1977
தயாரிப்பு நிறுவனம் ஜெயஸ்ரீ நாஞ்சில் இண்கார்பேட் இயக்குநர் நாஞ்சில் துரை
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் முத்துராமன் கதாநாயகி லட்சுமி
ஸ்ருதி D Major ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை தனிப்பாடல்
பாடலின் தன்மை தெய்வீகம் குழுவினர்

-

பின்னணி இசை1:

தொகையறா:

விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும் | 8 | குழு
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் | 8 | குழு
ஞானஜோதியே உயர்வான ஜோதியே | 8 | குழு
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே ......... 12 + 4

பல்லவி:

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்.....

பின்னணி இசை2: 6+2+6+16+2

சரணம்1:

மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்.....

பின்னணி இசை3: 12+2+8

சரணம்2:

அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் | 2 | குழு
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் | 2 | குழு
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே | 2 | குழு
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

       

More Songs

Feedback Contact Us Home