|
பின்னணி இசை1:
ஆலாபனை : ஓ........+4 - வயலின்
ஆலாபனை : ஓ........+4 - வயலின்
பல்லவி:
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் | 1 | பாக்கு வச்சு | 1 |
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
பின்னணி இசை2: 4+8+8
சரணம்1 :
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச்
சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும்
பாத்தாரு!
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச்
சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும்
பாத்தாரு!
பாதம் தொட்டுக் கூந்தல் மட்டும் கண்ணில்
அளந்தாரு!-ஒரு
பச்சைப் புள்ளையைப் போலே அள்ளி
நெஞ்சிலே வச்சாரு.... அம்மம்மோ ..... வச்சாரு!
ஆசையிலே புடிச்சாரு! ....அர்த்தத்தோட
சிரிச்சாரு!
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
பின்னணி இசை3: 8
சரணம்2
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி
அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு
இழுத்தாரு!
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு!
-நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு
இழுத்தாரு!
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே -
அவர்
ஆசைப்பட்டு ஒண்ணே ஒண்ணு தந்திடச் சொன்னாரு!
அம்மம்மா......... சொன்னாரு
(மெல்ல) ஒண்ணு மட்டுமா குடுத்தேன்
உள்ளத்தையே தான் குடுத்தேன்
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
ஆலாபனை : ஓ........... |