தத்திச் செல்லும் முத்துக்கண்ணன்
திரைப்படம் தங்கப்பதக்கம் வெளியான தேதி 1-6-1974
தயாரிப்பு நிறுவனம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் இயக்குநர் பி.மாதவன்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் சிவாஜி கணேசன் கதாநாயகி கே.ஆர்.விஜயா
ஸ்ருதி - ராகம் -
தாளம் - பாடல் வகை மூவர்
பாடலின் தன்மை குடும்ப உறவு குழுவினர்

-

வசனம்:சிவாஜி குரல்

ட்விங்கிள்..ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ ஒண்டர் வாட் யூ ஆர்
அப் அபவ் தி வர்ல்ட் சோ ஹை
லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை

பின்னணி இசை1: 4+10+12+2

பல்லவி:

பெண் : தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு...|4|கிதார்/மணி
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு
அள்ளித் தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு
விளையாட்டுப் பிள்ளை கொண்ட துடிப்பு-எங்கள்
வருங்காலம் அவன் கொண்ட பொறுப்பு
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு-
அள்ளித் தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு

பின்னணி இசை2: 2+2+2+2+8+8

சரணம்1:

காவல் தலைவன் ஞானத் தமிழன்
எந்தன் துணைவன் இன்பக் குமரன்
காவல் தலைவன் ஞானத் தமிழன்
எந்தன் துணைவன் இன்பக் குமரன்
ஆசைத் திலகம் அள்ளி அணிந்தான்
அன்புத் திலகம் துள்ளி விழுந்தான்
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு
அள்ளித் தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு

குழு: ட்விங்கிள்..ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ ஒண்டர் வாட் யூ ஆர்
அப் அபவ் தி வர்ல்ட் சோ ஹை
லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை

பின்னணி இசை3: 8-புல்லாங்குழல்

சரணம்2:

பெண் : தங்க மகனைப் பெற்றவள் என்று
என்னை உலகம் சொல்லி மகிழும்
தங்க மகனைப் பெற்றவள் என்று
என்னை உலகம் சொல்லி மகிழும்
வள்ளுவன் சொல்லைச் சொல்லும் என் பிள்ளை
அன்புக்கு எல்லை ஆனந்த முல்லை

தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு
அள்ளித் தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு

பின்னணி இசை4: 12+1

சரணம்3:

பெண் : குத்து விளக்கு அன்னை வடிவம்
முத்து விளக்கு பிள்ளை பருவம்
குத்து விளக்கு அன்னை வடிவம்
முத்து விளக்கு பிள்ளை பருவம்
பத்து விளக்கு தந்தை உருவம்
என்று விளக்கும் எங்கள் குடும்பம்

தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு-
அள்ளித் தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு
விளையாட்டுப் பிள்ளை கொண்ட துடிப்பு-எங்கள்
வருங்காலம் அவன் கொண்ட பொறுப்பு
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு-
அள்ளித் தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு

பெண்+குழு: ட்விங்கிள்..ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ ஒண்டர் வாட் யூ ஆர்
அப் அபவ் தி வர்ல்ட் சோ ஹை
லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை
ட்விங்கிள்..ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ ஒண்டர் வாட் யூ ஆர்
அப் அபவ் தி வர்ல்ட் சோ ஹை
லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை

       

More Songs

Feedback Contact Us Home