|
பின்னணி இசை1: ஆலாபனை-ஆ...
பல்லவி:
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..
|2|வயலின்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
|2|வயலின்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை
பாடல்..(ஆலாபனை)
|4|வயலின்
சரணம்1:
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி...ஆ...
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான்
மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
எனக்காக நீயழலாம் இயற்கையில் நடக்கும் - நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று....
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
பின்னணி இசை2:
சரணம்2:
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை -
என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்....
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல....
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் |