|
பின்னணி இசை1: 4 + 4 + 8 + 4
பல்லவி :
ஆண் :ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
பெண் :ஒரே நாள் உனை நான் நிலாவில்
பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
பின்னணி இசை2: 4+8+4+6
சரணம் 1 :
ஆண் :மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள்
நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான்
மிதக்க
பெண் :சங்கமங்களில் இடம் பெறும்
சம்பவங்களில் இதம் இதம்
ஆண் :மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....
பெண் :ஒரே நாள் உனை நான் நிலாவில்
பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
பின்னணி இசை3: 8+8+4+4
சரணம் 2 :
பெண் :நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள்
நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான்
படித்தேன்
ஆண் :கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
பெண் :மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...
ஆண் :ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
பின்னணி இசை4: 4+12 ( ஆ/பெ : ஆலாபனை )+4
சரணம் 3 :
ஆண் :பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீயிருக்க
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீயிருக்க
பெண் :கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்
ஆண் :இரவும், பகலும், இசை முழங்க....
பெண் : ஒரே நாள்
ஆண் உனை நான்
பெண் : நிலாவில் பார்த்தது
ஆண் : உலாவும் ....
பெண் : உன் இளமைதான்
ஆ/பெ : ஊஞ்சலாடுது... ஊஞ்சலாடுது... ஆஹ,
ஹாஹ, ஹா..... |