நான் உன்ன நெனச்சேன்
திரைப்படம் கண்ணில் தெரியும் கதைகள் வெளியான தேதி 14-3-1980
தயாரிப்பு நிறுவனம் ராஜா மீனாட்சி பிலிம்ஸ் இயக்குநர் தேவராஜ்
இசையமைப்பாளர் சங்கர்கணேஷ பாடலாசிரியர் -
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் சரத்பாபு கதாநாயகி ஸ்ரீபிரியா
ஸ்ருதி C ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை தனிப்பாடல்
பாடலின் தன்மை காதல் குழுவினர்

-

பின்னணி இசை1: 8+ 4

பல்லவி:

ஆண் : நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு | 2 | (குயில்) +| 2 |
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

பின்னணி இசை2: 8 + 8

சரணம்1:

ஆண் : நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு
நித்தம் நித்தம் பூத்தாயே, நான் பறிச்ச ரோசாவே
இனிமே எப்பவரும் பூவாசம்
சொல்லம்மா என்னம்மா சொல்லம்மா....
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

பின்னணி இசை3: 14 + 4

பெண் 1 :அப்போ வந்து வாங்கித்தந்தே பூச்சேலை
நீ எப்போ வந்து போடப்போற பூமாலே
அம்மஞ் சிலை இங்கேதான்
ஆடித்தேரு அங்கேதான்
இருந்தா கோயில் குளம் ஏனய்யா
செல்லையா என்னய்யா.... சொல்லய்யா....
நான் உன்ன நெனச்சேன்...நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

பின்னணி இசை4: 8 + 8

பெண் 2: மாடு மனை எல்லாம் உண்டு என்னோட... என்
நெஞ்ச மட்டும் போக விட்டேன் உன்னோட...
உன்னத் தொட்டு நான் வாறேன்
என்னவிட்டு ஏம்போறே
நிழல்போல் கூடவந்தா ஆகாதோ....
செல்லையா... என்னய்யா... சொல்லய்யா...

நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
உன்னாலே நெஞ்சு புண்ணாச்சு

ஆண் : நான் உன்ன நெனச்சேன் | 2 | (வயலின் )

பெண் 1: நீ என்ன நெனச்சே | 2 | (வயலின் )

பெண் 2:தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

ஆண் : நம்ம யாரு பிரிச்சா

பெண் 2 : ஒரு கோடு கிழிச்சா

பெண் 1: ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு

ஆண் : ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு

பெண்2 : நீ இல்லாமத்தானே

பெண்1: அது மாயம் என்றாச்சு

ஆண் : அது மாயம் என்றாச்சு | 4 | - குயில்
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே.... நெஞ்சு ஒண்ணாச்சு....

       

More Songs

Feedback Contact Us Home