|
பின்னணி இசை1: Chord
பல்லவி:
மல்லிகை முல்லைப் பூப்பந்தல்...
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல் |1|- வீணை
மஞ்சள் வாழை மாமரங்கள்...|1|-சிதார்
பச்சை மாவிலைத் தோரணங்கள்...|1|-Harp
எல்லாம் எதற்காக?
நமக்குக் கல்யாணம்
அதற்காக...|4|-புல்லாங்குழல்
மல்லிகை முல்லைப் பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலைத் தோரணங்கள்
எல்லாம் எதற்காக?
நமக்குக் கல்யாணம் அதற்காக...
பின்னணி இசை2: 16-நாதஸ்வரம்
சரணம்
1:
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திடும் பூங்குழல் முடித்து
பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து
பக்கம் தோழியர் துணைவர
நடந்து...|4|வீணை/சிதார்
மந்திரம் சொல்லும் மேடையிலே
மங்கள வாத்தியம் முழங்கையிலே
அழகன் உங்கள் அருகினிலே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே...|8|நாதஸ்வரம்
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே...
எல்லாம் எதற்காக?
நமக்குக் கல்யாணம் அதற்காக
பின்னணி இசை3: 6-வயலின்+6/வீணை/சிதார்
சரணம்
2:
அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம்
அன்னத் தூவியில் ஆனந்தக் கோலம்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அன்பு நாடகம் ஆரம்பமாகும்
பள்ளியின் வாசல் கதவடைத்து
பஞ்சணைப் பைங்கிளி கையணைத்து
வெள்ளி முளைக்கும் வேளை வரை
சொல்லி முடிப்போம் காதல் கதை
சொல்லி முடிப்போம் காதல் கதை
எல்லாம் எதற்காக?
நமக்குக் கல்யாணம் அதற்காக!
மல்லிகை முல்லைப் பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலைத் தோரணங்கள்.... |