பாரதி கண்ணம்மா
திரைப்படம் நினைத்தாலே இனிக்கும் வெளியான தேதி 1979
தயாரிப்பு நிறுவனம் பிரேமாலயா இயக்குநர் கே.பாலச்சந்தர்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஸ் பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் கமல்ஹாசன் - ரஜினிகாந்த் கதாநாயகி ஜெயபிரதா
ஸ்ருதி A Major ராகம்  
தாளம் 3/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல குழுவினர்

-

பின்னணி இசை1: 3+2+6+8+6

பல்லவி:

பெண் : ஆலாபனை ஆ..........

ஆண் : ஆலாபனை ஆ..........

ஆண்: பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா, கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பெண்: பாரதி கன்னையா, நீயே சின்னையா, கேளிதை பொன்னையா
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா, ஆயிரம் சொல்லைய்யா
ஆயினும் என்னய்யா, ஆயிரம் சொல்லைய்யா

பின்னணி இசை2: 4+18+8

சரணம்: 1

பெண்: ஒரே ராகங்களில் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களில் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது, இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லையா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லையா

ஆண்: நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் என்னும் பல கோடி
பலவகை நறுமணம். தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா, தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா

பெண்: பாரதி கன்னையா, நீயே சின்னய்யா, கேளிதை பொன்னய்யா

ஆண்: அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

பின்னணி இசை3: 8 +8

சரணம்: 2

பெண்: விழா காலங்களில் பாடும் சிலை பாடும் வரை பாடும்
விழா காலங்களில் பாடும் சிலை பாடும் வரை பாடும்

காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும். இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா. ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா. ஆயிரம் சொல்லய்யா

ஆண்: அலைமோதும் படி ஓடும்நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும் படி ஓடும்நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதல் முதல் பயம் வரும், வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா, தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா

பெண்: பாரதி கன்னையா நீயே சின்னனையா, கேள் இதை பொன்னையா

ஆண் : அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

பெண் : அதிசய மலர்முகம், தினசரி பலரகம்

       

More Songs

Feedback Contact Us Home