|
ஆலாபனை:
ஆண்: ஆ... ததரினனா... ஆ... / ஆ... ஆ...
தேவி......(புல்லாங்குழல்/மிருதங்கம்).
ஸ்ரீதேவி.....(புல்லாங்குழல்/மிருதங்கம்)
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்ததொரு
வார்த்தை சொல்லி விடம்மா
பாவி, அப்பாவி, உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....
பின்னணி இசை1: | 8 |
ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்ததொரு வார்த்தை
சொல்லி விடம்மா - பாவி, அப்பாவி, உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....
கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும்
பக்தனம்மா | 2 | ( மணி )
சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும்
பித்தனம்மா | 2 | ( மணி )
பின்னணி இசை2: 6+8+8+4+4+8
சரணம்: 1
பெண் மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலி பூசாரியே...ய்
ஆண்: பட்டப் போடாத பூசாரி நான்,
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்
அம்மன் உன்மேனி, ஆணிப் பொன்மேனி,
அன்பன் தொடவேண்டுமே
பெண்: ஹா.... எடத்த குடுத்தா மடத்த பிடிப்ப
எனக்கா தெரியாது
ஆண்: ஹே.. ஹே.. ஹே...
பெண்: வரத்த கொடுத்தான் சிவனே தவிச்சான்
எனக்கா புரியாது
ஆண்: ஆ...... தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்ததொரு வார்த்தை
சொல்லி விடம்மா - பாவி, அப்பாவி, உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....
பின்னணி இசை3:4+4+4+2+2+4+4+4+4+4+4
சரணம்: 2
பெண்: பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி - ஆசை ஆகாதைய்யா
ஆண்: கண்ணில் நடமாடும் சிவகாமியே.....யே
அன்பின் உருவான அபிராமியே.... யே
காஞ்சி காமாட்சி, மதுர மீனாட்சி, எனக்கு
நீதானம்மா
பெண்: ஆ..ங்..ஆ... செக்குமாடு சுத்திவரலாம்
ஊர்போய் சேராது
ஆண்: ததரின தரன்னனா
பெண்: இந்த மோகம் ஒருதலராகம் மயக்கம்
தீராது
ஆண்: ஏ...ஏ.. தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்ததொரு வார்த்தை
சொல்லி விடம்மா - பாவி, அப்பாவி, உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா.... |