வசந்த கால நதிகளிலே
திரைப்படம் மூன்று முடிச்சு வெளியான தேதி 22-10-1976
தயாரிப்பு நிறுவனம் ஆர்.எம்.எஸ். புரொடக்ஷன்ஸ் இயக்குநர் கே.பாலச்சந்தர்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர் ஜெயச்சந்திரன் பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் கமல்ஹாசன் கதாநாயகி ஸ்ரீதேவி
ஸ்ருதி E Minor ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல் குழுவினர்

-

பின்னணி இசை1: 4+12+2+14+10

பல்லவி:

ஆண்: வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

பெண்: நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

பின்னணி இசை2: 16+4

சரணம்:1

ஆண்: மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்

பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

பின்னணி இசை3:: 4+2+4+2 4+2+4+2+8

சரணம்:2

பெண்: ஆ...ஆ.....
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

ஆண்: வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

       

More Songs

Feedback Contact Us Home