|
பின்னணி இசை1: 4 பல்லவி:
ஆண்: இலக்கணம் மாறுதோ..| 2 | (தாளம்)
இலக்கணம் மாறுதோ..
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ..
பின்னணி இசை2: 8+8+4
சரணம்: 1
ஆண்: கல்லான முல்லை
இன்றென்ன வாசம்
காற்றான ராகம்
ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார்
மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன்
கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
இலக்கணம் மாறுதோ............
பின்னணி இசை3: 2+2+2+2+4
சரணம்: 2
பெண்: என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ
கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ
கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே
திரை போட்டு வைத்தேன்
திரை போட்டபோதும்
அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை
விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ
பின்னணி இசை4: 10+2+4+4
சரணம்: 3
ஆண்: தள்ளாடும் பிள்ளை
உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட
ஆதாரம் இல்லை
தெய்வங்களெல்லாம்
உனக்காக பாடும்
பாடாமல் போனால்
எது தெய்வமாகும்
மறுபடி பிறக்கும்
உனக்கொரு பாதை
உரைப்பது கீதை
பின்னணி இசை5: 4
சரணம்: 4
பெண்: மணியோசை என்ன
இடியோசை என்ன
எதுவந்தபோதும்
நீ கேட்டதில்லை
நிழலாக வந்து
அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து
எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது
ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்
ஆ...ஆ...ஆ....
இலக்கணம் மாறுதோ..
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது.. என்ன.. பாடம்... |