அன்பு மேகமே
திரைப்படம் எங்கம்மா சபதம் வெளியான தேதி 4-10-1974
தயாரிப்பு நிறுவனம் விஜய் பாஸ்கர் பிலிம்ஸ் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
இசையமைப்பாளர் விஜய் பாஸ்கர் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர் ஜேசுதாஸ் பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் முத்துராமன் கதாநாயகி ஜெயசித்ரா
ஸ்ருதி D Minor ராகம்  
தாளம் 3/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல் குழுவினர்

-

பின்னணி இசை1: | 2 |

பல்லவி:

பெண்: அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

ஆண்: அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

பின்னணி இசை2: 6+4+4+4+4

சரணம்1:

பெண்: கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

ஆண்: பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான்சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ

பெண்: எனது மயக்கம் தெளிந்ததா
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா

ஆண் : அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

பின்னணி இசை 3 : 4+4+8

சரணம் 2 :

பெண்: காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கைசேர்க்க வந்தது உறவு

ஆண்: சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமம் ஆகும் காட்சி உண்டு

பெண்: போ மன்றமே வா நெஞ்சமே

ஆண் புதிய உலகம் பிறந்தது

பெண்: பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

       

More Songs

Feedback Contact Us Home