நினைவாலே சிலை செய்து
திரைப்படம் அந்தமான் காதலி வெளியான தேதி 26-1-1978
தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ் இயக்குநர் வி.சீனிவாசன்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் சிவாஜி கணேசன் கதாநாயகி சுஜாதா
ஸ்ருதி A Major ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல் குழுவினர்

-

பின்னணி இசை1 : 2

பல்லவி:

ஆண்: நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா......... ஆ...
திருக்கோவிலே ஓடி வா

| 2 | வயலின்

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா......... ஆ...
திருக்கோவிலே ஓடி வா

நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேறின்றி மலரே ஏதம்மா
வேறின்றி மலரே ஏதம்மா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

பின்னணி இசை2: 16+12

சரணம் 1:

பெண்: ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தின் கோலங்கள்
கன்னத்தின் கோலங்கள்

ஆண்: செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடிவா!

பெண் : ஆ......திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

பின்னணி இசை3: 8+8

சரணம் 2 :

ஆண் : முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்

பெண்: என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன்
உன்னைத்தேடித் தேடி
திருக்கோவிலே ஓடிவா

ஆண் : ஆ......திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

பெ/ஆ : ஆ......திருக்கோவிலே ஓடிவா!

       

More Songs

Feedback Contact Us Home