அந்த மானைப் பாருங்கள் அழகு
திரைப்படம் அந்தமான் காதலி வெளியான தேதி 26-1-1978
தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ் இயக்குநர் வி.சீனிவாசன்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் சிவாஜி கணேசன் கதாநாயகி சுஜாதா
ஸ்ருதி A Minor ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல் குழுவினர்

-

பின்னணி இசை1: 4+8+2+2

பல்லவி:

பெ: அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!

ஆண்: இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்-இந்த
ஏழை பாடும் வேதம்!
அந்தமானும் உன்போல அழகு! இளம்
பாவை உன்னோடு உறவு அந்த
தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
காதல் பெண் தூவும் பன்னீர்

பெ: அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!

பின்னணி இசை2: 10+8

சரணம் 1 :

பெ: நல்ல பூவும் தேனும் திரண்டு-சுகம்
பொங்கும் உள்ளங்கள் இரண்டு-இது
ராஜ யோக சொர்க்கம்-இனி
பேச என்னங்கே வெட்கம்?

அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!

ஆ: இது ஏக்கம் தீர்க்கும் தனிமை-என்ன
இன்பம் அம்மா உன் இளமை-இந்த
தேவி மேனி மஞ்சள்-நான்
தேடி ஆடும் ஊஞ்சல்

பெ: உங்கள் கைகள் என்ற சிறையில்-வரும்
கால காலங்கள் வரையில்-நான்
வாழவேண்டும் உலகில்-அந்த
மானைப்போல அருகில்!
அந்த மானைப் பாருங்கள் அழகு!

ஆ : ஆ...........( ஆலாபனை )

பெ: இளம் பாவை என்னோடு உறவு

ஆ : ஆ...........( ஆலாபனை )

       

More Songs

Feedback Contact Us Home