நாதமெனும் கோவிலிலே
திரைப்படம் மன்மதலீலை வெளியான தேதி 27-2-1976
தயாரிப்பு நிறுவனம் கலாகேந்த்ரா இயக்குநர் கே.பாலச்சந்தர்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் கமல்ஹாசன் கதாநாயகி ஹாலம்
ஸ்ருதி C/F Major ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை தனிப்பாடல்
பாடலின் தன்மை - குழுவினர்

-

பின்னணி இசை1: ஆலாபனை : ஆ..........ஆ.....

பல்லவி:

நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....
நாதமெனும் கோவிலிலே ........

பின்னணி இசை2: 8+6
1 1 2 1 2 1 1 1 1 2 2 1 2 2 1 2 2
| ம த நி த பா ; | ஸ் நி த ம த ம க ரி | ம க ரி ஸ , ம க ரி |
1 1 2 2 2 1 1 2 1 1 2
| ஸா , த ம க ரீ | , நி த ம கா , ம | தா, நி ஸ்஡ ; |

சரணம்1:

இசையும் எனக்கிசையும் ... தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்

நாதமெனும் கோவிலிலே .......

பின்னணி இசை3: 8+8+4

சரணம்2:

விலையே எனக்கிலையே - தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்

நாதமெனும் கோவிலிலே ........

பின்னணி இசை4:8+6

1 1 2 1 2 1 1 1 1 2 2 1 2 2 1 2 2
| ம த நி த பா ; | ஸ் நி த ம த ம க ரி | ம க ரி ஸ , ம க ரி |
1 1 2 2 2 1 1 2 1 1 2
| ஸா , த ம க ரீ | , நி த ம கா , ம | தா, நி ஸ்஡ ; |

சரணம் 3 :

இறைவன் என ஒருவன் -எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்.....

நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....

       

More Songs

Feedback Contact Us Home