|
வாணி
ஜெயராம், இந்திய இசை உலக மகுடத்தில் மின்னும் வைரம்.
கடந்த 37 ஆண்டுகளாக ரசிக நெஞ்சங்களில் இசைமழை
பொழிந்துவரும் மேகம். 'வர்ண'ஜாலம் காட்டிவரும்
வானம்பாடி. இனம், மொழி கடந்த இவரது இசைப்பயணம் 2
வயதிலேயே தொடங்கிவிட்டது என்றால் நம்புவதற்கு
சிரமமாகத்தான் இருக்கு. அந்தப் பிஞ்சு வயதில்
ராகங்களையும், இசைக் குறிப்புகளையும் இவரால் இனம்
கண்டுகொள்ள முடிந்தது அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியது. 'கலைவாணியின்' பரிபூரண அருளுடன், முறையான
சங்கீதப் பயிற்சியும் இவரது திறமையை மெருகேற்றின.
திருமணத்துக்குப் பிறகு மும்பை சென்றவர், உஸ்தாத்
அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி மெல்லிசைப்
பயிற்சியும் பெற்றார். தினமும் 18 மணிநேர அசுர
சாதகம்...தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த
தேர்ச்சி பெற்றார் வாணி. 1969, மார்ச் 1ம் தேதி
அரங்கேற்றத்தில் பொழிந்த இசை மழையில் நனைந்த ரசிகர்
கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது. மும்பையின் அத்தனை
சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு மொய்த்தன. இந்தி இசை
அமைப்பாளர் வசந்த் தேசாயிடம் இருந்தும் அழைப்பு
வந்தது. அடுத்த நாளே பாடல் பதிவு. இதைத் தொடர்ந்து
மாரத்தி பாடல் வாய்ப்புகள் குவிந்தன. இயக்குனர்
ரிஷிகேஷ் முகர்ஜி, இசையமைப்பாளர் வசந்த் தேசாய்
கூட்டணியில் உருவான 'குட்டி' திரைப்படத்தில் வாணியின்
குரல் தேன் சொட்டியது. அத்தனை பாடல்களும் சூப்பர்
ஹிட். அந்த படத்தில் பாடிய 'போல் ரே பபி ஹரா' 5
விருதுகளை அள்ளிச் சென்றது. தான்சேன் விருதும் தானே
வந்தது.
1976... 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒலித்த
'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் தமிழ் ரசிகர்களை கிறங்க
வைத்தது. தேசிய விருதும் தேடி வந்தது. அழகே உன்னை
ஆராதிக்கிறேன், மீரா, சங்கராபரணம்,
ஸ்வாதிகிரணம்...என்று இந்த இசைக் குயிலின்
தேவராகத்தில் பிறந்த பாடல்கள் ரசிகர்களின்
உள்ளங்களையும், விருதுகளையும் கொள்ளையடித்தன. நௌஷாத்,
மதன் மோகன், ஓ.பி.நையர், ஆர்.டி.பர்மன், கல்யாண்ஜி
ஆன்ந்த்ஜி, லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே.வி. மகாதேவன்,
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி,
இளையராஜா...என்று இவர் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை.
குஜராத், ஒரிசா, தமிழகம், ஆந்திர மாநில அரசுகளும்
விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. பத்தாயிரம்
பாடல்களைக் கடந்தும் இவரது இன்னிசைப் பயணம் தொய்வின்றி
தொடர்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா,
சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், பக்ரைன், கத்தார்,
பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்...என்று இவர் இசை நிகழ்ச்சி
நடத்தியுள்ள நாடுகளின் பட்டியல் நீள்கிறது. இவை இவரது
சாதனை சரித்திரத்தில் சில பக்கங்கள் மட்டுமே.
| வாணி ஜெயராம்
பெற்ற விருதுகள்...
|
| குடியரசுத்
தலைவரின் தேசிய விருது |
அபூர்வ
ராகங்கள் (தமிழ், 1976), சங்கராபரணம்
(தெலுங்கு, 1980), ஸ்வாதிகிரணம் (தெலுங்கு,
1992).
|
| மியான்
தான்சேன் விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1971 (இந்தி, போல் ரே பபி
ஹரா)
|
| குஜராத்
அரசு விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1972 (குஜராத்தி,
'குங்கத்'). |
| தமிழக அரசு
விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை
ஆராதிக்கிறேன்). |
| பிலிம்பேர்
விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1980 (மீரா) |
| ஆந்திர
அரசு விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்). |
| ஒரிசா அரசு
விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
|
| தமிழக
அரசின் கலைமாமணி விருது |
1991 |
| மும்பை
'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட
விருது |
1992 1972
(குஜராத்தி, 'குங்கத்'). |
| தமிழக அரசு
விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை
ஆராதிக்கிறேன்). |
| பிலிம்பேர்
விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1980 (மீரா) |
| ஆந்திர
அரசு விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்). |
| ஒரிசா அரசு
விருது |
சிறந்த
பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
|
| தமிழக
அரசின் கலைமாமணி விருது |
1991 |
| மும்பை
'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட
விருது |
1992 |
| தமிழக அரசு
வழங்கும் 'எம்.கே. தியாகராஜ பாகவதர் -
வாழ்நாள் சாதனையாளர்' விருது |
2004 |
|